ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை- அமைச்சர் காமராஜ் தகவல்

வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-23 06:35 GMT
சென்னை,

வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது. இந்த நிலையில்,  விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில், “வெங்காய விலை உயர்வு தற்காலிகமானது தான். 

வெங்காயம் அறுவடை பகுதியில் பெய்து வரும் மழையால் தற்போது விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு தொடரும் பட்சத்தில் ரேஷனில் வெங்காயம் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 22 நாட்களில் சுமார் 2.85 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.” என்றார். 

மேலும் செய்திகள்