தி.மு.க.வில் திருப்பூர் மாவட்டம் 4 ஆக பிரிப்பு - தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க.வில் திருப்பூர் மாவட்டம் 4 ஆக பிரித்து தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்டத்தை, தி.மு.க. நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருப்பூர் மாநகர், திருப்பூர் வடக்கு, திருப்பூர் கிழக்கு, திருப்பூர் தெற்கு என 4 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.
அதன்படி, திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு மாவட்டத்தில், அவிநாசி (தனி), பல்லடம், திருப்பூர் கிழக்கு மாவட்டத்தில் காங்கேயம், தாராபுரம் (தனி), திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன.
இந்த 4 மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு க.செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு இல.பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்டத்திற்கு மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.