தமிழகத்தில் புதிதாக 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு - தமிழக சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் தொடர்ந்து 3 வது நாளாக 5 ஆயிரத்துக்கு கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.;

Update: 2020-10-14 13:01 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,462 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,70,392 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 52 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,423 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 5,083 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,17 லட்சமாக  உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தற்போது 42,566 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து 3 வது நாளாக 5 ஆயிரத்துக்கு  கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

மேலும் செய்திகள்