வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது. மழை நீரை சேமிக்க நீர்நிலைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன, மேலும் பருவமழையை எதிர்கொள்ள மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கை கட்சியின் பொக்கிஷம், அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும். எங்களின் கூட்டணியில் உள்ள பாஜகவில் குஷ்பு இணைந்தது பலம்தான்.
துணைவேந்தர் சூரப்பா ஜனநாயக ரீதியில் மரபுசார்ந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்றும் உரிமைகள் பாதிக்காத வகையில் வளர்ச்சியை பெற வேண்டும் என சூரப்பாவின் கடிதம் குறித்து இவ்வாறு அவர் கூறினார்.