"பண்டிகை கால ஷாப்பிங்கில் கவனம் தேவை" - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

பண்டிகை கால பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-10-13 10:59 GMT
மதுரை,

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார் ஆய்வுக்கு பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலாளர்,

கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம்.

கொரோனா பரவும் இந்த நேரத்தில் பண்டிகை கால பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். 

கொரோனா தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். விழிப்புணர்வு மட்டும் போதாது பழக்க வழக்கம் மாற்றம் அவசியம் என கூறினார். 

மேலும் செய்திகள்