தமிழக வனக்காப்பாளர்கள் 170 பேருக்கு வனவராக பதவி உயர்வு தமிழக அரசு தகவல்

தமிழகத்திலுள்ள வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதில் வனத்துறையில் பணிபுரியும் வனக்காப்பாளர்கள் மற்றும் வனவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

Update: 2020-10-12 21:30 GMT
சென்னை, 

தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு வனத்துறையில் வனக்காப்பாளர் பதவியில் 8 ஆண்டு காலம் பணி முடித்து, உரிய தகுதிகளுடன் உள்ள வனக்காப்பாளர்களுக்கு, வனவர்களாக பதவி உயர்வு வழங்க துறை தேர்வுக்குழுமம் அமைக்கப்பட்டது. அதன்படி தகுதியுள்ள வனக்காப்பாளர்கள் 170 பேருக்கு வனவராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்திலுள்ள வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாப்பதில் வனத்துறையில் பணிபுரியும் வனக்காப்பாளர்கள் மற்றும் வனவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இப்பதவி உயர்வு மூலம் வனம் மற்றும் வன உயிரினங்களின் பாதுகாப்புப் பணியில் இவர்களின் பங்களிப்பு மேலும் சிறப்பாக அமைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்