பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரபிரதேசம் முதலிடம், தமிழகம் இரண்டாமிடம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-05 13:21 GMT
சென்னை,

உ.பி. ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு திமுக மகளிரணி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தொடங்கி வைத்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழகத்தில் விரைவில் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம். திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாவட்ட ரீதியாக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.

ராகுல்காந்தியை கீழே தள்ளியுள்ளனர் என்று நினைக்ககூடாது. ஜனநாயகத்தையே கீழே தள்ளி உள்ளனர். உ.பி. இன்று ரத்த பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கிறது.

ஹத்ராஸ் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.  ஹத்ராஸ் போன்ற பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே திமுகவின் கோரிக்கை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்