தமிழகத்தில் புதிதாக 5,622 பேருக்கு கொரோனா: மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,718 தாண்டியது
தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,
தமிழகத்தில் மேலும் 5,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5,614, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேர் உட்பட 5,622 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் 4,258 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 34-வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 6,08,885லிருந்து 6,14,507 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,70,963 ஆண்கள், 2,43,513 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு 46,255 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் 85,446 பேருக்கும், இதுவரை 73,90,225 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 87,311 மாதிரிகளும், இதுவரை 76,13,999 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 1,364 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களாக 1000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 5,596 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,70,025 லிருந்து 1,71,415 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,52,938-ல் இருந்து 5,58,534 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 65 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 41 பேர், தனியார் மருத்துவமனைகளில் 24 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 9,718 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,262 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.