வேளாண்மை சட்டங்களை தி.மு.க. எதிர்ப்பது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்
மத்திய அரசின் விவசாய சட்டங்களை தி.மு.க. கடுமையாக எதிர்ப்பது ஏன்? என்பது குறித்து மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி கிராம ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடக்க இருக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
3 விவசாய சட்டங்களை பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டங்களால் விவசாயிகள் வாழ்க்கை செழித்து குலுங்க போவதாக பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டங்களால், விவசாயி வாழ்க்கை தரிசு நிலமாக போகப்போகிறது தான் உண்மை. விவசாயிகள் உற்பத்தி செய்கிற பொருட் களுக்கு குறைந்தபட்ச அடக்க விலையை இந்த சட்டங்கள் சொல்லவே இல்லை. விவசாயிகளை காக்க வேண்டிய தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்கிறது.
விவசாயி என்ன விளைய வைக்கலாம்; அதை யாருக்கு விற்கலாம்; என்ன விலைக்கு விற்கலாம் என்பதையெல்லாம் தீர்மானிக்கின்ற உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கத்தான் இந்த சட்டங்கள் மூலமாக வழி வகுத்திருக்கிறார்கள். இந்திய உணவுக்கழகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் இவை எல்லாவற்றையுமே மூடப்போகிறார்கள்.
உழவர் சந்தைகளை இனி திறக்க மாட்டார்கள். வேளாண்மை என்பது மாநில பட்டியலில் இருக்கிறது. ஆனால், மாநில உரிமைகளை பறித்து கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைக்கிறது இந்த சட்டம். இந்த சட்டத்தில் விவசாயிக்கு இழப்பீடு உண்டா? கடன் தள்ளுபடி உண்டா? உணவு தானிய மானியம் உண்டா? உர மானியம் உண்டா?. பொருட்களை பதப்படுத்தி வைக்க நிதி உதவி உண்டா?. விவசாயத் தொழிலாளர்க்கு வேலை உத்தரவாதம் உண்டா? எதுவுமே இல்லை. அதனால்தான் இந்த சட்டங்களை நாம் கடுமையாக எதிர்க்கிறோம்.
இந்த சட்டங்கள் அத்தியாவசிய உணவு பொருட்களின் பதுக்கலுக்கு வழிவகுக்கிறது. செயற்கையான தட்டுப்பாடு உருவாக வகை செய்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை கொண்டு வரும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், அதற்கு தலையாட்டும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும் திராவிட முன்னேற்ற கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் கடந்த 28-ந்தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
இன்று தமிழக கிராமங்கள் அனைத்திலும் நடக்கக்கூடிய கிராம சபை கூட்டங்களில், மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 சட்டங்களையும் எதிர்த்து, அனைத்து ஊராட்சி தலைவர்களும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அனைத்து கிராம சபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
வேளாண் துறையை காப்பாற்ற கட்சி வித்தியாசம் பாராமல் அனைவரும் இதனை செய்ய வேண்டும். இந்த 3 சட்டங்களுக்கும் எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் இருக்கிறது என்பதை இரண்டு அரசுகளுக்கும் காட்ட வேண்டும். இதற்கான முன்முயற்சிகளை தி.மு.க. ஊராட்சி மன்றத்தலைவர்கள், உறுப்பினர்கள், மாவட்டச்செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.