தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 அடி உயர்வு
தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீர் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் நிலத்தடி நீர் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் தற்போது வரை 402 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 24 சதவிகிதம் அதிகம் என்று தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் கூறியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதேகாலத்தில் 223 மில்லி மீட்டராக இருந்தது.
2018 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர்மட்டம் 16.3 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலையில் இது தற்போது 14 மீட்டராக உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 556 நீர் சேமிப்பு திட்டங்கள் மூலம் 2 ஆயிரத்து 248 எம்எல்டி தண்ணீரை சேமிக்க புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.