தமிழகத்தில் 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ.353.11 கோடியில் அமைக்கப்பட்ட 25 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Update: 2020-09-19 10:16 GMT
சென்னை,

தமிழகத்தில் ரூ.353.11 கோடி மதிப்பீட்டில் சென்னை, கோவை, ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 25 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த 25 துணை மின் நிலையங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து பல மாவட்டங்களில் ரூ.9.70 கோடியில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடம் ஆகியவற்றையும் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

மேலும் செய்திகள்