அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு
அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு பணியிடங்களில் உள்ள பணியாளர்கள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பொது இடமாறுதல் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக தற்போதைய சூழலில் பொது மாறுதல்களை நிறுத்தி வைக்குமாறு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அனைத்து துறை துணைச் செயலாளர்களுக்கு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் அரசு பணியிடங்களில் பொது இடமாறுதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இடமாறுதல் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டும் மாறுதல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.