விவசாயிகள் பெயரில் மோசடி: தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு - பா.ஜனதா குற்றச்சாட்டு
விவசாயிகள் பெயரில் நடைபெற்ற மோசடியின் தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை,
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் பெயரில் நடைபெற்ற மோசடியின் தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழக பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் மத்திய அரசுடையது. செயல்படுத்துவது மாநில அரசே. முறைகேடுகளின்றி செயல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை. தவறுகளுக்கு பொறுப்பு மாநில அரசே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.