விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது - தமிழக அரசு

விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2020-09-09 13:21 GMT
சென்னை,

தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-

* விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.

* உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதி.

* மைதானங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்ப தடை.

* மைதானங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை.

* முகக்கவசம் அணிவது கட்டாயமானது மற்றும் விளையாட்டு மைதானத்திற்குள் எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும்.

* கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வருபவர்கள் மைதானத்திற்குள் நுழைய தடை.

* தண்ணீர் பாட்டிலை அவரவர் எடுத்துவர வேண்டும்.

* மைதானத்தில் உள்ள கழிப்பறைகளை தவறாமல் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

* விளையாட்டு மைதான வளாகத்திற்குள் தின்பண்டங்கள், துரித உணவு போன்றவை விற்பனை செய்யப்படாது.

* மைதானத்தில் உடற்பயிற்சி செய்யும் போது பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்