கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை பற்றி பேச்சுவார்த்தை: கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

Update: 2020-09-08 19:45 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொரு மாதமும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து வருகிறார்.

அந்த வகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நேற்று மாலை 5 மணி முதல் 5.20 மணி வரை நீடித்தது.

இந்த சந்திப்பின்போது அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், முதல்-அமைச்சரின் செயலாளர் செந்தில்குமார், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது கொரோனாவினால் ஏற்பட்ட பாதிப்புகள், நோய் தடுப்பு தொடர்பாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உள்பட பல தகவல்கள் அடங்கிய முழு விவர அறிக்கையை கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்தார்.

மேலும் செய்திகள்