மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தொற்று பரவலை தடுக்க முடியாது: முதல்வர் பழனிசாமி
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அதிகமாக பரவினால் சமாளிப்பது எப்படி? என்பது பற்றி மருத்துவ குழுவுடன் இன்று முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் பேசியதாவது:-
- கொரோனா நோய் தொற்று குறைந்து வருகிறது
- மருத்துவ நிபுணர்கள், காவல்துறையினரின் செயல்பாட்டால் நோய் தொற்று குறைந்து வருகிறது
- ஊரடங்கு தளர்வு பெரும்பாலும் அறிவிக்கப்பட்டுள்ளது
- அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு
- மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் மினி கிளினிக்கில் இடம்பெறுவர்
- தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு
- அனைத்து நிறுவனங்களும் 100 சதவீதம் திறக்கப்பட்டுள்ளது .
- ஊரடங்கு தளர்வை பொதுமக்கள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்
- மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம்
- கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
- காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது