அரசு கலைக்கல்லூரிகளில் முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிவு - 70 சதவீத இடங்கள் நிரம்பின
முதற்கட்ட மாணவர் சேர்க்கை முடிவில் அரசு கலைக்கல்லூரிகளில் 70 சதவீத இடங்கள் நிரம்பின
சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொரோனா தொற்று காரணமாக மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
ஆனால் அவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருந்தனர். அவர்களுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. முதற்கட்ட மாணவர் சேர்க்கை கடந்த 4-ந்தேதி முடிவடைந்த நிலையில் இதுவரை 60 முதல் 70 சதவீத இடங்கள் வரை நிரம்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இனி வரக்கூடிய நாட்களில் மாணவர் சேர்க்கையை விரைந்து நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய கல்லூரிக் கல்வி இயக்ககம் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர் சேர்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 31-ந்தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.