சுப்பிரமணிய சாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் ஆவணி திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் ஆவணி திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவானது, வரும் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி நடைபெற உள்ளது.
எனவே, திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளை ஆன்-லைனில் காண கோவில் நிர்வாக ஏற்பாடு செய்துள்ளதால், திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சாமி தரிசனம் செய்ய மட்டும் கோவில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.