தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிப்பு

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-04 04:02 GMT
சென்னை,

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால் பஸ், ரெயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது.

இதனிடையே செப்டம்பர் 1-ம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும், டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்