தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக இருக்கிறது பா.ஜனதா நிர்வாகிகள் மத்தியில் ஜே.பி.நட்டா பேச்சு
தமிழக வளர்ச்சிக்கு தி.மு.க. தடையாக இருப்பதாக பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.
சென்னை,
தமிழக பா.ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சென்னை கமலாலயத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமை உரையாற்றி கூட்டத்தை தொடங்கிவைத்தார். பா.ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் சிறப்புரை ஆற்றினார். தமிழக பொறுப்பாளரும், தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ் தமிழக பா.ஜனதா சார்பில் ஜெ.பி.நட்டாவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் பேசியதாவது:-
தமிழகம் மிக நீண்ட பாரம்பரியம், கலாசாரத்தை பெற்றிருக்கும் மாநிலம். தமிழகம் ஒரு ஆன்மிக பூமி. கோவில்கள் அதிகம் நிறைந்திருக்கும் பகுதி. பண்பாடு, கலாசாரம் போல தனித்துவம் பெற்றது தமிழ் மொழி.
தேசியத்துக்கு எதிரான ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது தி.மு.க. தான். தேசிய வளர்ச்சிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் அக்கட்சி தடையாக இருந்து கொண்டிருக்கிறது. நாட்டை பற்றிய அக்கறை இல்லை. உதாரணத்துக்கு கருப்பர் கூட்டம் சம்பவத்தை சொல்லலாம். அதனை அவர்கள் கண்டிக்கவே இல்லை. ஆனால் இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜனதா அழுத்தமான முத்திரையை பதித்து இருக்கிறது.
நாட்டின் வளர்ச்சி குறித்து கவலைப்படாத தி.மு.க. உள்பட தீயசக்திகள் இனி தமிழகத்தில் இருக்கவே கூடாது. வரும் காலகட்டத்தில் தமிழகத்தில் பா.ஜனதா முக்கியமான பங்கு வகிக்க இருக்கிறது. உள்ளாட்சி மன்ற, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழக பா.ஜனதா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கொரோனா ஒழிப்பு பணியில் பிரதமர் நரேந்திரமோடியின் முக்கிய நடவடிக்கைகள் தீவிர பங்காக அமைந்திருக்கின்றன. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 10 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யும் வல்லமை இருக்கிறது. இதற்கெல்லாம் பிரதமரின் தீவிர நடவடிக்கைகளும், தீர்க்கமான ஆலோசனைகளுமே காரணமாகும்.
தமிழகத்தில் மொழியின் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் 8-ம் வகுப்பு வரை கட்டாயம் மாணவர்கள் தாய்மொழியில் தான் படிக்கவேண்டும் என்பதே தேசிய கல்வி கொள்கையின் முக்கிய சாராம்சம் ஆகும். இதனை மக்களிடம் பா.ஜனதாவினர் தான் எடுத்து சொல்ல வேண்டும். படிக்கும்போதே மாணவர்கள் தொழில்கள் கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை இத்திட்டம் உருவாக்கும்.
அடுத்து வரும் காலகட்டங்களில் தமிழகம் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட உள்ளது. நீண்டகால ராமர்கோவில் பிரச்சினை தீர்க்கப்பட்டது. காஷ்மீர் விவகாரம் உள்பட அதி முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளது. இதை மக்களிடம் எடுத்துச்சொல்வதே நமது முதல் வேலையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பொதுச் செயலாளர்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன் மற்றும் நடிகை நமீதா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மதச்சார்பின்மை என்பது இந்துக்களை தவிர பிற மதங்களின் மீது அக்கறை காட்டுவது என்றும், இந்துக்களின் மீதும் இந்து வழிபாட்டின் மீதும் களங்கம் கற்பித்து கொச்சைப்படுத்துவது என்றும் தி.மு.க.வும், காங்கிரசும் ஒரு சேர செயல்பட்டு வருகிறது. எனவே போலி மதச்சார்பின்மையோடு தெய்வீகத்திற்கு விரோதமாகவும், தேசத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தி.மு.க.வின் போக்கை சுட்டிக்காட்டி இச்செயற்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.