கொரோனா பாதித்து சிகிச்சை சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் ‘டுவிட்டர்’ பதிவு

கொரோனா பாதித்து சிகிச்சைபெற்று வரும் சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Update: 2020-07-25 21:20 GMT
சென்னை, 

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வேகமாக குணமடைய வேண்டும்.

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு அவர் பூரண குணமடைய வேண்டும் என்றும், மக்கள் பணியை மீண்டும் தொடரவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்