மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடல்
சாத்தான்குளம் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.’
மதுரை,
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சிபிஐ அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.