காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-07-22 09:38 GMT
காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், கொரோனா பரிசோதனை முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் இன்றைய நிலவரப்படி, இதுவரை நடத்திய பரிசோதனைகளில் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,658 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,934 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். காஞ்சிபுரத்தில் தற்போது 2,653 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்