நெல்லை,தேனி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது

நெல்லை,கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Update: 2020-07-22 08:52 GMT
சென்னை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,809 ஆக அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தில் மேலும் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,496  ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  35 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

நெல்லை மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,079 ஆக அதிகரித்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்தது. புதிய உச்சமாக ஒரேநாளில் 4 அரசு மருத்துவர்கள் உள்பட 188 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தேனியில் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 3,047 ஆக உயர்ந்துள்ளது. இங்கு 1,428 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,564 பேர் தற்போது 


மேலும் செய்திகள்