தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக வெப்பசலனம், பருவகாற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஓரிரு இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘சின்னக்கல்லாறு 11 செ.மீ., மடத்துக்குளம் 9 செ.மீ., கோபிசெட்டிப்பாளையம், குமாரபாளையம், சோலையாறு தலா 7 செ.மீ., தேவாலா, ஓமலூர், வால்பாறை, டேனிஸ்பேட்டை தலா 6 செ.மீ., சூலூர், சின்கோனா, கொடுமுடி, தாராபுரம், பவானி, கொடைக்கானல், திருச்செங்கோடு, வெள்ளக்கோவில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.