வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 5 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் ஊரடங்கால் 20 நாடுகளில் சிக்கி தவித்த 38 ஆயிரத்து 97 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

Update: 2020-07-20 20:53 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் ஊரடங்கால் 20 நாடுகளில் சிக்கி தவித்த 38 ஆயிரத்து 97 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனைவரும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஏற்கனவே 690 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது முகாமில் தங்கி இருந்தவர்களில் சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், வளைகுடா நாட்டில் இருந்து வந்த ஒருவருக்கும் என மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

அதுபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 98 ஆயிரத்து 473 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்தது.

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று 72 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 69 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 44 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 31 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

மேலும் செய்திகள்