தாம்பரம் அருகே 3 தனியார் பஸ்கள் எரிந்து நாசம்
தாம்பரம் அருகே 3 தனியார் பஸ்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலை புலிகொரடு மலை அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 தனியார் பஸ்கள் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தன. இது குறித்து தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,
உடனடியாக தாம்பரம் மற்றும் தேனாம்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அங்குள்ள பொதுமக்களே பெரும் பகுதி தீயை அணைத்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களும் அரை மணிநேரம் போராடி, 3 பஸ்களில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் 3 பஸ்கள் மற்றும் ஒரு வீட்டில் இருந்த 2 மேல்நிலை நீர்தேக்க பிளாஸ்டிக் தொட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.
நேற்று காலையில் இருந்து தாம்பரம் பகுதியில் நல்ல மழை பெய்து வந்தது. எனவே பஸ்கள் தானாக தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை. மர்ம ஆசாமிகள் யாராவது பஸ்சுக்கு தீ வைத்தனரா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, “அந்த பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடக்கிறது. கஞ்சா வாங்குபவர்கள் தீ விபத்து நடந்த இடத்தில் அமர்ந்துதான் கஞ்சா புகைப்பது வழக்கம். அப்போது யாராவது தீ வைத்து இருக்கலாம்” என்றனர்.
பஸ்சின் பேட்டரிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே மர்மநபர்கள் பஸ்சுக்கு தீ வைத்ததால் பேட்டரிகள் வெடித்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.