மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-15 13:58 GMT
சென்னை,

தமிழகத்தில்   மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள்  அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மட்டுமே மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

2 மாதங்களுக்கான கணக்கீட்டிலும் தனித்தனியாக 100 யூனிட்டுகள் கழிக்கப்படுகின்றன  எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்