தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா தொற்று: பிற மாவட்டங்களில் அதிவேகமாக பரவும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-07-13 12:59 GMT
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 3,188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 48,196 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 77,411 லிருந்து 78,573 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 87,111 ஆண்கள், 55,664 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,38,470 லிருந்து 1,42,798 ஆக உயர்ந்தது.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532-ல் இருந்து 92,567 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,035 பேர் இன்று ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 48,195 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 68 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 1,277 பேர் உயிரிழந்துள்ளனர்.சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனாவால் இதுவரை 755 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்