நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கக்கோரி வழக்கு - ஓசூர் போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கக்கோரி வழக்கு தொடர்பாக, ஓசூர் போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று தமிழக கவர்னரை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி ஓசூர் போலீசாரிடம், தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் நகர செயலாளர் ஹரி பிரசாத் மனு கொடுத்திருந்தார். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதை எதிர்த்து அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கொரோனா பாதிப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு, காவல்துறையிடம் புதிதாக மனு மனுதாரர் அளிக்கவேண்டும். அதை சட்டத்திற்குட்பட்டு ஓசூர் இன்ஸ்பெக்டர் பரிசீலித்து உரிய முடிவை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.