அரசு ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் தாக்கல் செய்ய விலக்கு - தமிழக அரசு உத்தரவு
அரசு ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வு சான்றிதழ் தாக்கல் செய்ய விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், நேரில் ஆஜராகி வாழ்வுச் சான்றிதழ் தாக்கல் செய்ய இந்த ஆண்டுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், இந்த ஆண்டுக்கான ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான பட்டியலை தயாரிப்பதில் இருந்து விலக்களித்து கடந்த ஜூன் 29ந் தேதி அரசு ஆணை பிறப்பித்தது. இதில் மற்றொரு விளக்கத்தையும் அரசு தற்போது வெளியிடுகிறது. அதன்படி, இந்த ஆண்டில் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் நேரில் ஆஜராகவும், வாழ்வுச் சான்றிதழை தாக்கல் செய்யவும் விலக்களித்து உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.