அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-07-10 07:30 GMT
சென்னை,

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வருகிறது. 

அதனை தொடர்ந்து நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.சென்னையை பொருத்தவரை இரவு முழுவதும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. 
 
இந்நிலையில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 39% அதிகமாக பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்