வருமானவரித்துறை முதன்மை தலைமை கமிஷனர் பொறுப்பேற்பு

வருமானவரித்துறை முதன்மை தலைமை கமிஷனராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்றார்.

Update: 2020-07-09 00:47 GMT
சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களுக்கான முதன்மை தலைமை வருமானவரித்துறை கமிஷனராக பணியாற்றி வந்த அனு ஜெ சிங் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மும்பையில் இருந்து பதவி உயர்வு பெற்ற மாணிக்லால் கர்மாகர், தமிழ்நாடு, புதுச்சேரி மாநில முதன்மை தலைமை வருமானவரித்துறை கமிஷனராக பொறுப்பேற்றார்.

இவர் 1985-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் வருமானவரித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி உள்ளார்.

மேற்கண்ட தகவலை வருமானவரித்துறை கூடுதல் கமிஷனர் பி.திவாகர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்