எஸ்.ஆர்.எம். ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை அடுத்த வாரம் தொடக்கம்
எஸ்.ஆர்.எம். ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனா தடுப்பு மருந்து சோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் (ஐ.சி.எம்.ஆர்.) இணைந்து ஐதராபாத்தில், செயல்பட்டு வரும் ‘பாரத் பயோடெக்’ நிறுவனம், ‘கோவேக்சின்’ என்ற கொரோனா வைரசுக்கான டுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த தடுப்பு மருந்து தற்போது இறுதிகட்ட சோதனையை எட்டியுள்ளது.
அந்த தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வதற்கு செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம் உள்பட 12 மருத்துவ நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். அனுமதி வழங்கியது. அடுத்த வாரத்தில் இருந்து சோதனை தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ‘டீன்’ டாக்டர் சுந்தரம் கூறியதாவது:-
கொரோனா வைரசை தடுப்பதற்கான ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் ஆராய்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது. அதில் தகுதியான 100 தன்னார்வலர்கள் தேர்வு செய்து பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலில் இருந்து சில ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறோம். அவை அனைத்தும் அடுத்த ஒரு சில நாட்களில் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் இருந்து ஆராய்ச்சிக்கான பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.