எத்தனை டாக்டர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டுள்ளது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
எத்தனை டாக்டர்களுக்கு கவச உடை வழங்கப்பட்டுள்ளது? அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை செயலாளர் வக்கீல் ஜிம்ராஜ் மில்டன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படி, தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பிற துறை செயலாளர்கள், தன்னார்வலர்களை கொண்ட ஒரு குழுவையும், அதேபோல மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை அமைப்புகளை உருவாக்கி, கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று தாக்காத வண்ணம் முழு உடல் கவச உடை வழங்கப்பட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பாலன் அரிதாஸ், ‘இந்த வழக்கில் அரசு தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட நிலையறிக்கையில் கொரோனா நோய் சிகிச்சை ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்ட 22 அரசு ஆஸ்பத்திரிகளில் எத்தனை டாக்டர்கள்
பணியமர்த்தப்பட்டுள்ளனர், அவர்களில் எத்தனை பேருக்கு முழு உடல் கவசம் வழங்கப்பட்டுள்ளது? உள்ளிட்ட விவரங்கள் இல்லை‘ என்று வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.