தாய்லாந்தில் திருவிழாவில் குண்டுவெடிப்பு; 3 பேர் பலி-50 பேர் படுகாயம்

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்

Update: 2024-12-15 03:08 GMT

பாங்காக்,

தாய்லாந்தின் தக் மாகாணம் உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி சிலர் வெடிகுண்டு வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உடல் சிதறி பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.இதனையடுத்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்