மதுரையில் நாளை மறுநாள் முதல் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு

மதுரை மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-06-22 11:29 GMT
மதுரை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது.  பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.  எனினும், போதிய எச்சரிக்கை உணர்வின்றி சிலர் நடந்து கொள்கின்றனர்.  இதனால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படுகிறது.

இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 705 ஆக உயர்ந்து உள்ளது.  மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் முயற்சியாக, மதுரை மாவட்டத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தினை குறைப்பது என அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதன்படி, நாளை மறுநாள் முதல் காலை 6 முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்