மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த 4 நாட்களுக்கு (ஜூன் 25 வரை) தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.