சென்னையில் நாளை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேட்டி

சென்னையில் நாளை எந்த தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு பின்பற்றப்படும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-06-20 14:16 GMT
சென்னை,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று முதல் வரும் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது வரும் இரண்டு ஞாயிற்றுகிழமைகளிலும் எந்த வித தளர்வுகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் நாளை எந்த தளர்வும் கிடையாது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நாளை ஜிம்பர் நுழைவுத் தேர்வு நடைபெற இருப்பதால் அதற்கான ஹால்டிக்கெட்டை காட்டினால் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 6,421 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கை மீறியதாக 2,791 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்