எல்லோரும் ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையை இறுதி செய்ய வேண்டும் - தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

எல்லோரும் ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையை இறுதி செய்ய வேண்டும் என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-06-20 12:05 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் அபாயம் காரணமாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையிலும் அவர்களின் வருகைப் பதிவேடு அடிப்படையிலும் தேர்ச்சி அளிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் சில பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுக்கான விடைத்தாள்கள் காணாமல் போனதால் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இது குறித்த தெளிவான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எல்லோரும் ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையை இறுதி செய்ய வேண்டும் என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மதிப்பெண் மதிப்பீடு தொடர்பான குழப்பங்களுக்கும், குளறுபடிகளுக்கும் முற்றுப் புள்ளி எப்போது வைக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்