முழு ஊரடங்கு; தமிழக அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் - வியாபாரிகளுக்கு, வெள்ளையன் வேண்டுகோள்

முழு ஊரடங்கில் தமிழக அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று வியாபாரிகளுக்கு, வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-06-18 20:48 GMT
சென்னை, 

தமிழ்நாடு வணிகர் சங்கங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை வணிகம் செய்ய வணிகர்களை கேட்டுக்கொள்கிறேன். கடைக்கு வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி கட்டாயம் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமாறு வணிகர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து பகுதி சங்கங்களும் இதனை நடைமுறைப்படுத்தி கொரோனாவை முழுமையாக விரட்டி அடிப்போம். தமிழக அரசு, பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறை வழிகாட்டுதல்படி தேவையின்றி மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும், வீட்டிலும், வெளியிலும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்