சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்!

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2020-06-09 07:02 GMT
சென்னை: 

இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் மொத்தம் கொரோனா பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில், "சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியலை பகிர்ந்துள்ளது.

திருவெற்றியூர்870
மணலி343
மாதவரம்650
தண்டையார் பேட்டை 3019
ராயபுரம்4023
திரு.வி.க.நகர்2273
அம்பத்தூர்828
அண்ணா நகர்2068
தேனாம்பேட்டை2646
கோடம்பாக்கம்2539
வளசரவாக்கம்1088
ஆலந்தூர்412
அடையாறு1325
பெருங்குடி421
சோழிங்கநல்லூர்420
மற்றமாவடங்களுக்கு மாற்றபட்டவர்கள்373
அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ராயபுரம். அங்கு 4023 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 3019 பேருக்கு என தண்டையார்பேட்டை உள்ளது. 

அதேபோல சென்னை மாநகராட்சி  மண்டலத்தில் கொரோனாவால் அதிகம் இறந்தவர்களில் பட்டியலிலும் முதலிடத்தில் ராயபுரம் உள்ளது. இங்கு 46 பேர் இறந்துள்ளனர். அதேபோல திரு.வி.க.நகர் பகுதியில் 39 பேர் இறந்துள்ளனர். இது இரண்டாவது இடத்தில் உள்ளது.

08.06.2020 அன்று வரை, பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், 49.1% பேர் (11,265) குணமடைந்துள்ளனர்; இறப்பு சதவிகிதம் 0.9% ஆக உள்ளது என சென்னை மாநகராட்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்