ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது - அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து
ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால் சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா பரவலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பபட்டுள்ளது. எனவே, கடந்த மார்ச் மாதமே திரையரங்குகளில் வெளியாக வேண்டிய திரைப்படம், அமெஸான் பிரைமில் உள்ளிட்ட ஆன்லைன் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இன்னும், முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது என்றும், திரைத்துறையின் 100 ஆண்டு கால வரலாற்றில் ஆன்லைனில் படம் வெளியானது இதுவே முதன்முறை.
ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படும் எனக்கூறினார்.
சமீபத்தில் நடிகை ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் ஆன்லைனில் வெளியான நிலையில் அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.