தமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதார துறை தகவல்

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-06-04 13:46 GMT
சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. 5 - ம் கட்ட ஊரடங்கில் நாடு முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. நாள் தோறும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

தேசிய அளவில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எதிர்வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எம்ஜிஆர் பல்கலைக்கழக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 1,384 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,072 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 17,609லிருந்து 18,693 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 1,373 பேர், பிற மாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 11 பேர் என மொத்தம் 1,384 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ரோர் எண்ணிக்கை 25,987 இல் இருந்து 27,256 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,316-ல் இருந்து 14,901 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இதுவரை 167 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாளில் 585 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை 16,964 ஆண்கள், 10,278 பெண்கள், 14 திருநங்கைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்