தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா - தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா வைரஸ் காராணமாக 4 பேர் உயிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது.