தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-14 12:47 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. எனினும், தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கட்டுக்குள் வந்தபாடில்லை.  

குறிப்பாகக் கடந்த சில நாட்களாக  கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண முடிகிறது. எனினும், இந்த எண்ணிக்கையை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம், விரைவில் கொரோனா  கட்டுக்குள் வரும் என்று சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில், இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த தகவலின் படி,  தமிழகத்தில் இன்று மேலும் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9674-ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று  ஒரே நாளில் 64- பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2240-ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்