10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துவிட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகின்ற ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கொரோனா நோயைக் கட்டுப்படுத்த மே 17-ந்தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீடிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.
இந்நிலையில், இயல்பு நிலை திரும்ப இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ என்று தெரியாத சூழலில், 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்த வேண்டிய தேவை என்ன?
இந்த கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்துவிட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.