அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: சென்னையில் 690 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் 690 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-05-12 22:15 GMT
சென்னை, 

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் இதன் பாதிப்பு சென்னையில் மிக அதிகமாக காணப்படுகிறது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ கடந்துள்ளது. திரு.வி.க நகர் மற்றும் தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 400-ஐ கடந்திருக்கிறது. அந்தவகையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக திரு.வி.நகர் மண்டலத்தில் 124 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 116 தெருக்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தேனாம்பேட்டை மண்டலத்தில் 78 தெருக்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 22 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 690 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகளால் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்