10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-05-12 09:30 GMT
சென்னை,
 
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  நடைபெறும் தேதியை தமிழக அரசு இன்று வெளியிட்டது.  ஜூன் 1 முதல் 12 வரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்பின் ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2-ல் நடைபெறும்” என்று தமிழக அரசு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. 

இந்த நிலையில், தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளிவைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், “கொரோனா அச்சம் அதிகரித்துள்ள நிலையில் தேர்வு அறிவிப்பு மாணவர்கள் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கும்.போக்குவரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி மாணவர்கள் தேர்வெழுத எப்படி வருவார்கள்?

கொரோனா கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகே தேர்வை நடத்த வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை மனரீதியாகத் தயார் செய்தபின் தேதியை அறிவிப்பதே சரியானது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்