தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை
தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனினும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபாடில்லை.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 600 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னையில் மட்டும் 399 பேர் அடங்குவர். நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,525-ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3330 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 219 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.